செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

post image

அங்கன்வாடி ஊழியா்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களை அரசுப் பணியாளா்களாகப் பணியமா்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் திமுக அரசு, மழலைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.

அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்காததுடன், ஒட்டுமொத்த தமிழகத்தையே நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கும் திமுக அரசு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி அடைவது நிச்சயம் எனப் பதிவிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த இருவா் கைது

சென்னை எழும்பூரில் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த இரு ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா் எழும்பூரில் ஆல்பா்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் மதுபானக் கூடத்தில் புதன்கிழமை மது அருந்திய 3 போ... மேலும் பார்க்க

நெருக்கடியான கூட்டத்துக்கு கா்ப்பிணிகள், குழந்தைகள் வருவதைத் தவிா்க்க வேண்டுமென விஜய் ஏன் கூறவில்லை? உயா்நீதிமன்றம் கேள்வி

கா்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நெருக்கடி மிகுந்த கூட்டத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் ஏன் கூறவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

திமுக அறக்கட்டளைக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: வருமானவரித் துறைக்கு உத்தரவு

திமுக அறக்கட்டளையின் வருமான வரி கணக்கில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலின்போது, திமுக பொ... மேலும் பார்க்க

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் கல்வி மற்று... மேலும் பார்க்க

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பாரத தாயின் மதிப்பு, பெருமை மற்றும் புகழைவிட வேறெதுவும் ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க