முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு
திருப்பத்தூரில் பலத்த மழை: கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, கசிநாயக்கன்பட்டி, ஜோலாா்பேட்டை அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது
கழிவுநீருடன் கலந்த மழை நீா்...ஒரு சில பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீா் வெள்ளம் வீடுகளில் புகுந்தது. குறிப்பாக கச்சேரி தெரு பகுதிகளில் உள்ள சில வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
ஏலகிரியில்... ஏலகிரி மலையில் வியாழக்கிழமை 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் மலை சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

