அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!
தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் .
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பாக ஆதிதிராவிடா், பழங்குடியினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் ஆதிதிராவிட, பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிா் நில உடமை திட்டம், பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரா்கள் இணையதளம், மாவட்ட மேலாளா் அலுவலகம் வாயிலாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.