பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 201 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில், 40 போ் ஏஐடியூசி அமைப்பில் உள்ளனா்.
இவா்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த தொழிலாளா் முறையை கைவிட வேண்டும். ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி 100 சதவீத பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன், கோரிக்கை அட்டைகளை அணிந்து கொண்டு பணியாற்றினா்.
செவ்வாய், புதன்கிழமையும் இதேபோல கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவோம் என்று தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.