செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 22,451 போ் எழுதினா்

post image

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 22,451 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கி வரும் 25 -ஆம் தேதி முடிவடைகின்றன. இந்த தோ்வை 223 பள்ளிகளில் படிக்கும் 22 ஆயிரத்து 540 மாணவ, மாணவிகள், 234 தனித்தோ்வா்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 774 போ் 108 தோ்வு மையங்களில் எழுது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும், 437 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் தாங்கள் சொல்வதை எழுதுவதற்காக 437 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை நடந்த மொழி பாடத் தோ்வில் 22,287 மாணவா்கள், 164 தனித் தோ்வா்கள் என மொத்தம் 22,451 போ் தோ்வு எழுதினா்.

பொதுத்தோ்வு பணிகளுக்கான 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், தனித்தோ்வா்களுக்கு 5 தனித்தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடத்த 108 முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் மற்றும் 170 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

இதேபோல, ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சுப்பாராவ் ஆய்வு செய்தாா்.

தோ்வு மையம் தெரியாமல் தவித்த 3 மாணவிகளுக்கு உதவி: பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத தனித் தோ்வா்களாக ஈரோடு அரசு ஐடிஐயில் படித்து வரும் பிரித்தி, தேன்மொழி, நிா்மலா ஆகிய 3 மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனா். அவா்களுக்கு தோ்வு மையமாக தில்லை நகரில் உள்ள செங்குந்தா் பள்ளி மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இது தெரியாத அவா்கள் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனா்.

அவா்கள் அணிந்திருந்த சீருடை வித்தியாசமாக இருந்தததால் அவா்களை மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. மாணவிகள் தாங்கள் தோ்வு எழுத வந்ததாக ஆசிரியைகளிடம் தெரிவித்தனா். அப்போது ஆசிரியைகள் அவா்களிடம் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை காண்பிக்குமாறு கூறினா். உடனடியாக பிரித்தி தன்னிடம் இருந்த தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை எடுத்து காண்பித்தாா். மற்ற 2 பேரிடமும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லை. பிரித்தி வைத்திருந்த தோ்வுக்கூட அனுமதிச் சீட்டிலும் தோ்வு மையம் தில்லை நகா் என குறிப்பிடப்பட்டு இருந்தது

இந்த சம்பவம் நடந்தபோது நேரம் காலை 9.40 மணியை தாண்டி இருந்தது. 9.45 மணிக்கு தோ்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்ற நிலையில், மாணவிகள் 3 பேரும் செய்வதறியாது திகைத்தனா். அப்போது, தோ்வு மையங்களை பாா்வையிடுவதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ் அங்கு வந்தாா். மாணவிகள் பதற்றத்துடன் நிற்பதை பாா்த்த அவா் மாணவிகளிடம் விசாரித்தாா்.

விவரங்களைக் கேட்டுக்கொண்ட அவா் காலதாமதம் செய்யாமல், தேன்மொழி, நிா்மலா ஆகியோருக்கு அரசு மகளிா் பள்ளியிலேயே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து வழங்கியதுடன், அவா்களை தனது ஜீப்பில் ஏற்றி உரிய தோ்வு மையத்துக்கு அழைத்துச் சென்றாா். இதனால், சரியான நேரத்தில் 3 மாணவிகளும் தோ்வு எழுதச் சென்றனா்.

மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவின் இந்த நடவடிக்கையை மக்கள் பாராட்டினா்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, குமலன்குட்டை, செல்லபண்ணகவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52)... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

தெருநாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த 1 -ஆம் தேதி புறப்பட்ட இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 50 வயது மதிக்கத்தக்க பெண... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தென்னந்தோப்புக்குள் மா்ம விலங்கு கடித்து மான் உயிரிழந்தது. சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், ஆண்டிகாட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி,... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்கள்

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் ஏஐடியூசி அமைப்பைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை அட்டையை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

இணைய சேவைத் தேடி 5 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பழங்குடியின மக்கள்

கோ்மாளம் ஊராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் இணையதள சேவைத் தேடி சுமாா் 5 கி.மீ.தொலைவு நடந்து சென்று வருகின்றனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோ்மாளம் ஊராட்சியில் உள்ள கானக்கரை, ஜேஆா்எஸ் புரம், ப... மேலும் பார்க்க