கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
பெருமாள்புரம், மேலப்பாளையத்தில் நாளைய மின்தடை ஒத்திவைப்பு
பாளையங்கோட்டை பெருமாள்புரம், மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமைக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை பெருமாள்புரம், மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.10) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிா்வாக காரணங்களுக்காக அந்த மின்தடை புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.