செய்திகள் :

`பேச மறுத்தார்… போலீஸில் புகார் செய்வதாக மிரட்டினார்; கத்தியால் குத்தினேன்!' - இளைஞர் `பகீர்!'

post image

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவருக்குத் திருமணமாகி, கணவர், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் கணவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டார். மகன்கள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.

ரமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து அவரைச் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் ரமா உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட லிங்கராஜ்

அங்கிருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து  ஏரல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் ரமாவை கொலைசெய்தது அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில், “ரமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும்  கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர், மனைவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து ரமா, லிங்கராஜிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.  இதனால் ரமாவைக் கொலைசெய்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த லிங்கராஜை போலீஸார் கைதுசெய்தனர்.

விசாரணையில், “ரமா 2 ஆண்டுகளாக என்னிடம் நன்றாக சிரித்துப் பேசி வந்தார். நாளடைவில் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக என்னிடம் பேசுவதை நிறுத்தினார். கடந்த 24-ம் தேதி ரமா அகரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது என்னிடம் பேசுவதை ஏன் நிறுத்தினாய்? எனக் கேட்டேன். `இனிமேல் என்னிடம் பேச வேண்டாம்' எனக் கூறினார்.

உடலை கைப்பற்றிய போலீஸார்

மறுநாள் பலமுறை போன் செய்தும் போனை தொடர்ந்து கட் செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த அவரிடம் தொடர்ந்து பேசு. உன்னுடனான பழக்கத்தை நிறுத்த முடியாது என்றேன். `தொடர்ந்து டார்ச்சர் செய்தால் போலீஸில் புகார் அளிப்பேன்' எனச் சொல்லி வீட்டின் கதவை அடைக்க முயன்றார். அது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்தினேன். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால் பைக்கை போட்டுவிட்டு ஓடிவிட்டேன்” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ. 3,87,000 வழிப்பறி கொள்ளை; போலீஸில் பொய் புகார்... நாடகம்; நிறுவன ஊழியர் சிக்கியது எப்படி?

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் (வயது: 28). பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை கடைகளுக்கு நேரடியாக சப்ளை செய்யும் நிறுவனத்தில் பாஸ்கரன் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வ... மேலும் பார்க்க

லிவ் இன் பார்ட்னர் கொலை; 40 துண்டுகளாக வெட்டிய காதலன் - அதிர்ந்த போலீஸ்

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த காதலன் கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி காட்டில் வீசி எறிந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.அதுபோன்ற... மேலும் பார்க்க

தருமபுரி: `சாலை வசதி இல்லை' - கிடைக்காமல் போன துரித சிகிச்சை; பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் அமைந்துள்ளது. இம்மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அ... மேலும் பார்க்க

`அசைவ உணவு சாப்பிட விடாமல் காதலன் துன்புறுத்தல்?' - ஏர் இந்தியா பெண் பைலட் மும்பையில் தற்கொலை!

மும்பையில் ஏர் இந்தியாவில் பைலட்டாக இருந்தவர் சிருஷ்டி துலி (25). மும்பை மரோல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரை சேர்ந்த துலி டெல்லியை சேர்ந்த ஆதித்யா ... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட விடுதி - சோதனையில் 47 பேர் கைது; ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண், மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் சம... மேலும் பார்க்க

சென்னை: நாய்கள் கடித்துக் குதறியதால் முதியவர் மரணமா? - அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை!

சென்னை, அரும்பாக்கம் வாசுகி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (80). இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்து வந்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். சு... மேலும் பார்க்க