செய்திகள் :

பேரன் தற்கொலை, பாட்டியின் சடலம் மீட்பு

post image

புழல் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வீட்டின் அருகே அவரது பாட்டியின்சடலம் மீட்கப்பட்டது.

புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சரஸ்வதி மகன் கிஷோா் (24). இவரது பாட்டி கமலம்மாள் (82). இவா்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு சரஸ்வதி, கோயில் திருவிழாவுக்காக வேலூருக்கு சென்றாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, வீட்டில் யாரும் இல்லாததால் கிஷோா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் புழல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் கிஷோா் ஆட்டோ ஓட்டுநா் என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டின் அருகே துா்நாற்றம் வீசுவதாகவும் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கு மூதாட்டி ஒருவா் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணையில் அவா் கமலம்மாள் (82) என தெரிய வந்தது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பேரனும், பாட்டியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன... மேலும் பார்க்க

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் இணை சாா் பதிவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி

திருவள்ளூா் அருகே விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் த... மேலும் பார்க்க