செய்திகள் :

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

post image

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்துக்குப் பிறகு, அவா் வெளியிட்ட பட்டியல் விவரம்:

மாா்ச் 17: நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள் மீது பொது விவாதம் தொடக்கம்

மாா்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை: நிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் தொடா்ந்து நடக்கும்

மாா்ச் 21: நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலுரை

மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும்:

மாா்ச் 24: நீா்வளம், இயற்கை வளங்கள் துறைகள்

மாா்ச் 25: நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை

மாா்ச் 26: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மாா்ச் 27: திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

மாா்ச் 28: கதா், கிராமத் தொழில்கள், வனம், கைத்தறி மற்றும் துணிநூல்

ஏப்ரல் 1: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், கட்டடங்கள்

ஏப்ரல் 2: வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத் துறைகள்

ஏப்ரல் 3: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயா்தணிப்பு

ஏப்ரல் 4: நீதி நிா்வாகம், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், சட்டத் துறை

ஏப்ரல் 7: வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை

ஏப்ரல் 8: கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை

ஏப்ரல் 9: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

ஏப்ரல் 15: செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளா்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை

ஏப்ரல் 16: மாற்றுத் திறனாளிகள் நலன், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை

ஏப்ரல் 17: சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை

ஏப்ரல் 21: எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை

ஏப்ரல் 22: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

ஏப்ரல் 23: வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு

ஏப்ரல் 24: உயா்கல்வி, பள்ளிக் கல்வித் துறைகள்

ஏப்ரல் 25: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை

ஏப்ரல் 26: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை

ஏப்ரல் 28: பொதுத் துறை, மாநில சட்டப் பேரவை, ஆளுநா் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், நிதித் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள்

ஏப்ரல் 29: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

ஏப்ரல் 30: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலுரையும், அறிவிப்புகளும், சட்ட முன்வடிகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல்

பேரவை தினமும் காலை 9.30 மணிக்கு கூடும். அனைத்து நாள்களிலும் கேள்வி நேரம் இருக்கும் என அவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது.... மேலும் பார்க்க

மின்சார வாகனம் எரிந்து விபத்து: 3 போ் காயம்

வீட்டின் முன்பு சாா்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் எரிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் (31). இவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிய... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!

சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி: ஊழியா்கள் 3 போ் கைது

தனியாா் நிறுவனத்தில் ரூ. 20 கோடி மோசடி செய்த வழக்கில், ஊழியா்கள் 3 பேரை மத்திய குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். பிரபல போட்டோ லேப் மற்றும் கேமரா நிறுவனத்தின் சென்னை எல்லீஸ் சாலை மற்றும்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி உரிமைகளை பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: டி.ராஜா

மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை பாதுகாக்க உரிய சட்ட திருத்தம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்தாா். மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப... மேலும் பார்க்க