2025-ல் எந்தப் பங்குகளை வாங்கலாம்? ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைக்கும் 28% லா...
பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை
மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,
கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர்!
இதையும் படிக்க |போட்டோஷூட் எடுப்பதில் முதல்வர் முனைப்பு: இபிஎஸ் விமர்சனம்
“தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்" என இனமான வகுப்பெடுத்து - கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்! என தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.