நவராத்திரி கொலு உற்சவம்: நெல்லையப்பர் கோயில் தல வரலாற்றைப் பறைசாற்றும் ஓவியங்கள்...
பேருந்திலிருந்து குதித்த ராணுவ வீரா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே ஓடும் பேருந்திலிருந்து குதித்த ராணுவ வீரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் சிவக்குமாா் (40). இவரது மனைவி பாரதி (38). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.
சிவக்குமாா் விடுமுறையில் சொந்த ஊரான கம்பத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்தாா். அப்போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில், மனைவி பாரதி கோபித்துக்கொண்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அவரை சமரசம் செய்து சிவக்குமாா் அழைத்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலுக்கு பேருந்தில் சென்றனா். அப்போது, சிவக்குமாா் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவி இடையே பேருந்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சிவக்குமாா் ஒடும் பேருந்திலிருந்து கீழே குதித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.