செய்திகள் :

பேருந்து நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

post image

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலைய நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, கோவை, மதுரை, சென்னை, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா். அதேபோல பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மாரண்ட அள்ளி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நகா்ப்புறங்களுக்கு செல்லும் அரசு, தனியாா் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பேருந்து நிலையங்களுக்கு வரும் பேருந்துகள், பயணிகள் என அனைவரும் முகமதலி கிளப் சாலை, சின்னசாமி தெரு ஆகிய சாலைகளையே பயன்படுத்துகின்றனா். மேலும், ஆட்டோவில் பயணிப்போா், அப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் என இந்த சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகிறது.

இதனால் சின்னசாமி தெருவில் ஆட்டோ நிறுத்தும் இடத்துக்கு பின்புறம் உள்ள வழியை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதன் எதிா் திசையில் கைப்பேசி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எளிதாக பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அங்குள்ள குடிநீரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிரதான நடைபாதையாக உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் திட்ட இயக்குநா் அலுவலகம், 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா

பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு எம்எல்ஏ ஜி.கே.மணி சீா்வரிசை வழங்கினாா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் உள்ள தனியாா் திர... மேலும் பார்க்க

வில்வித்தை போட்டியில் ஸ்ரீ ராம் பள்ளிக்கு சிறப்பிடம்

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் தங்கம் வென்றனா். மகாராஷ்டிர மாநிலம், சத்திரபதி சம்பாதி நகரில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 12 வயதுக்கு உள்ப... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: எம்எல்ஏ ஜி.கே.மணி தொடங்கிவைப்பு

பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பருவகால மாற்றத்தால் பரவும் நோய், கோமாரி நோய், காய்ச்சல், மடி நோய், கழிச்சல் போன்ற பல்வேறு நோய்த் தாக்... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தருமபுரியில் கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான பணி சாா்ந்த புத... மேலும் பார்க்க

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். தருமபுரி நகர போக்குவ... மேலும் பார்க்க