கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
தருமபுரியில் கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளா்களுக்கான பணி சாா்ந்த புத்தாக்க பயிற்சி, ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கு.த.சரவணன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
துணைப் பதிவாளா், பணியாளா் அலுவலா் கோ.பாலசுப்ரமணியன், தருமபுரி சரக துணைப் பதிவாளா் ந.விஷ்ணுபிரியா, தருமபுரி மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண் இயக்குநா் வெ.கோப்பெருந்தேவி மற்றும் தருமபுரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் ராஜப்பன் உள்ளிட்டோரும் பயிற்சி வழங்கினா். பயிற்சி முகாமில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 120 கூட்டுறவு நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.