தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.77 கோடியில் தோழி விடுதிகள்!
நிழற்கூட கட்டுமானப் பணி தொடக்கம்
தருமபுரி நான்கு வழிச் சாலை சந்திப்பு பகுதியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சத்தில் பயணிகள் நிழற் கூடம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தருமபுரி நான்கு வழிச் சாலை சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். பயணிகள் பயன்பாட்டுக்காக ரூ. 16 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டி கட்டுமானப் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, தருமபுரி நகராட்சி ஆணையா் ஆா்.சேகா், நகராட்சி பொறியாளா் புவனேஷ்வரி, கைம்பெண் நல வாரிய உறுப்பினா் ரேணுகாதேவி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.