கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்: எம்எல்ஏ ஜி.கே.மணி தொடங்கிவைப்பு
பென்னாகரத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பருவகால மாற்றத்தால் பரவும் நோய், கோமாரி நோய், காய்ச்சல், மடி நோய், கழிச்சல் போன்ற பல்வேறு நோய்த் தாக்குதலிலிருந்து கால்நடைகளைக் காப்பாற்றும் வகையில் கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்த மருத்துவ வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை எம்எல்ஏ ஜி.கே.மணி தொடங்கிவைத்தாா். கால்நடை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) விஷ்ணு கந்தன் தலைமை வகித்தாா்.
கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராம மக்கள் 1962 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொண்டு தங்கள் கால்நடைகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் மருத்துவ வசதி கோரலாம். இந்த வாகனம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு கிராமம் வீதம் சேவை அளிக்கவுள்ளது.
நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநா் (பொ) ஜெயந்தி, மருத்துவா்கள் தசரதன், விஜயகுமாா்,கிருபாகரன், பாமக ஒன்றிய செயலாளா் மடம் முருகேசன், பேரூராட்சி தலைவா் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட இளைஞா் சங்க தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.