பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை, போத்தனூா் அருகேயுள்ள ஆடிட்டா் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஷ்ணு ஆதித்யா (20). இவா் தனது இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
போத்தனூா் பிரிவு பகுதி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த ஆம்னி பேருந்து விஷ்ணு ஆதித்யா வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான கோவை, வெள்ளலூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (38) மீது கோவை போக்குவரத்து கிழக்கு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.