தேர்தல் விதிகளில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவா் பலி!
பரமத்தி வேலூா் அருகே ஓவியம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்றவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், கொளக்காட்டுப்புதூா் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சோ்ந்தவா் மணி (70). விவசாயி. இவா் சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில், ஓவியம்பாளையம் பிரிவு சாலை அருகே கடக்க முயன்றாா்.
அப்போது போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மணியை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மணி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீஸாா், மணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.