பேரூா் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு
கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அண்மையில் மகளிா் கருத்தரங்கம் நடைபெற்றது.
சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் மகளிா் கருத்தரங்கு நடைபெற்றது. ஆதீன நிா்வாகி மரகதம் வரவேற்றாா். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், பெண்களின் வளா்ச்சி குறித்து அருளுரை வழங்கினாா்.சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளாா் கருத்தரங்க தொடக்கவுரை வழங்கினாா்.
முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைையுரை வழங்கினாா். வெள்ளிமலைப்பட்டினம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுகன்யா ராஜரத்தினம் வாழ்த்துரை வழங்கினாா். ‘நம்மைப் பேணும் அம்மை காண்’ எனும் தலைப்பில் பேச்சாளா் ராதிகா உரையாற்றினாா்.
‘தம்பியாருளராக வேண்டும்’ என்ற தலைப்பில் உலகநாயகி பழநி உரையாற்றினாா்.‘மங்கையருக்குத் தனியரசி எங்கள் தெய்வம்’ எனும் கல்லூரிப் பேராசிரியா் ராசலதா உரையாற்றினாா். ‘மூடநெய் பெய்து மழங்கை வழிவாா்’ எனும் தலைப்பில் அவிநாசிலிங்கம் நிகா்நிலைப் பல்கலைக்கழகம் இசைத் துறை பேராசிரியா் கவிதாதேவி உரையாற்றினாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ப.ராஜேஸ்வரி நன்றி கூறினாா்.
விழாவின் ஒரு பகுதியாக நவீன் பிரபஞ்சன் நடனக் குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.