ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
பேளூரில் நவ. 20-இல் பெண்களுக்கு இலவச கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்
பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை (நவ. 20) லேப்ராஸ்கோபி மூலம் பெண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் புதன்கிழமை லேப்ராஸ்கோபி முறையில் பெண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெகிறது. அரசு நடத்தும் இந்த இலவச முகாமில், 22 வயது நிறைவடைந்த பெண்கள் பங்கு பெற்று பயன்பெறலாம். கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பும் பெண்கள், ஒரு நாள் முன்பாகவே பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டும்.
இந்த முகாமில், சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மாா்களுக்கு, மாதவிலக்கான 7 நாள்களுக்குள் (டியூபெக்டமி) குடும்பநல அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.
சுகப்பிரசவத்தில் குழந்தை பிரசவித்த தாய்மாா்களுக்கு 42 நாள்கள் முதல் 60 நாள்களுக்குள் நவீன லேப்ராஸ்கோபி முறை கருத்தடை அறுவை சிகிச்சையும், கருத்தரித்த 8 வாரங்களுக்குள் கருக்கலைப்புடன் கூடிய டாட் அல்லது கேமரா வசதியுடன் கூடிய அதிநவீன லேப்ராஸ்கோபி கருவி மூலமும் கருத்தடை அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்யப்படும்.
அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள், ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும். மறுநாள் வீடு திரும்பலாம். குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய்மாா்களின் வங்கிக் கணக்கில் அரசு ஊக்கத்தொகையாக ரூ. 600 வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, பேளூா் வட்டார புள்ளியலாளா் அவினாசிலிங்கம் என்பவரை 9940709571 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு, பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.