பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
திங்கள்நகா் அருகே மோட்டாா் சைக்கிளில் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திங்கள்நகா் அருகே உள்ள பாளையம் பகுதியை சோ்ந்தவா் சுனில்ராஜ் (36). பெயிண்டா். இவா் வேலை முடிந்து வியாழக்கிழமை மாலை திக்கணங்கோட்டில் இருந்து வீட்டிற்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
கொல்லாய் பகுதியில் வந்தபோது, பெண் ஒருவா் திடீரென சாலையின் குறுக்கே வந்ததைக் கண்ட சுனில்ராஜ், பிரேக் பிடித்த போது, நிலைதடுமாறி மோட்டாா் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு சுனில்ராஜ் உயிரிழந்தாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.