செய்திகள் :

பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?" - தமிழிசை கேள்வி

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'பைசன்' திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் 'பைசன்' படத்தைப் பார்த்துவிட்டு, "மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!" என்று நேரில் அழைத்து மரியாதை செய்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் மழைக்காலத்தில் மக்கள் பணியைவிட்டுவிட்டு சினிமா பார்ப்பதாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலினை எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் தமிழிசை செளந்தரராஜன், "முதல்வர் ஸ்டாலினின் செயல் மிகுந்த வேதனைக்குரியது. அவருடைய சன்(son) துணை முதல்வராக்கிவிட்டார், விவசாயிகள் சன் (son) பத்தி கவலையில்லை, அதுனால ஸ்டாலின் 'பைசன்' பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் மழையில் அவர்களிடைய சன் (sun) உதய சூரியன் காணாமல் போய்விடும்.

மாரி (மழை) வந்துகொண்டிருக்கும்போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?

 தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அதிமுக அமிஷ்ஷாவிற்கு அடிமையாக இருக்கிறது என்கிறார்கள். அப்படியென்றால் திமுக, ராகுல் காந்திக்கு அடிமையாக இருக்கிறது என்று கூறலாமா? பாஜக - அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதற்காக அடிமை என்றெல்லாம் சொல்வது அவதூறானது.

இந்த மக்களுக்கு எதிரான ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்" என்று விமர்சித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.

அதிமுக: முன்னாள் எம்.பி உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.அதிமுகவில் இருந்து வ... மேலும் பார்க்க

வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை வாய்ப்பு!

வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற... மேலும் பார்க்க

``கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு, படிச்சு படிச்சு சொன்னீங்களா?'' - தவெக அருண்ராஜ் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.இந்நிலையில் இ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நத... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்களுக்கு NTK எதிரியல்ல; 12 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம்" - சொல்கிறார் கார்த்திகைச்செல்வன்

'சாதி பார்த்து விழும் வாக்குகள் எனக்கு தீட்டு' எனப் பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களையே பெரும்பாலும் சாதி பார்த்துதான் தேர்வு செய்... மேலும் பார்க்க

``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து... மேலும் பார்க்க