செய்திகள் :

பொங்கல் தரிசனம்: `காசி முதல் திருக்கழுக்குன்றம் வரை'- அபூர்வ பலன்களை அருளும் சூரிய தலங்கள்

post image
சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் எழுந்தருளி உள்ளார் சூரியன். இந்த பன்னிரண்டு ஆதித்தியர் (சூரியன்)களது பெயர்கள், கோயில்கள் மற்றும் அவற்றை ஒட்டிய சிவாலயங்கள் குறித்து காசி காண்டம் எனும் நூல் விவரிக்கிறது. இவர்களை தரிசிப்பது, ‘சௌர யாத்திரை’ எனப்படும்.

தஞ்சை மாவட்டம்- சூரியனார் கோயிலில் தை மாத பிரம்மோற்ஸவம் விசேஷம். விழா வின் 10-ஆம் நாள் சூரியதேவன், காவிரிக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். அதன் பிறகு திருக்கல் யாண விழாவும், தேர்த் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

பொங்கல்

பரிதி நியமம்

பரிதி என்றால் சூரியன்; நியமம் என்றால் கோயில். சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற கோயில் ‘பரிதி நியமம்’ என்று பெயர் பெற்றது. தற்போது ‘பருத்தியப்பர் கோயில்’ என வழங்குகிறது. இங்கு அருளும் ஸ்வாமிக்கு பாஸ்கரேஸ்வரர், பருதியப்பர் என்று திருப்பெயர்கள்.

தாங்கமுடியாத வெப்பத்துடன் விளங்கும் சூரியன் குளிர்ச்சியுடன் திகழும் பொருட்டு, சித்ராபெளர்ணமி தினத்தில் மணலைக் கூட்டிச் சிவலிங்கம் செய்து வழிபட்ட திருத்தலம் இது. சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் முன் உள்ளது. இன்றைக்கும் பங்குனி மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியக் கிரணங்கள் ஸ்வாமியின்மீது படிகின்றன. அம்பிகையின் பெயர் மங்கலநாயகி. இந்தக் கோயில் குறித்து திருநாவுக்கரசர் ‘பருதி நியமத்தார் பன்னிரு நாள்’ என்று தமது கோயில் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இதையொட்டி, பன்னிரண்டு நாட்கள் இங்கு சூரியன் வழிபட்டான் என்பர்.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில், தஞ்சையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். ஒருகாலத்தில் இது சூரியனின் கோயிலாக இருந்து, பின்னாளில் சிவாலயமாக மாறி யிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சூரியன் பூசித்த ஏழு தலங்கள்

சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற ஏழு திருமுறைத் தலங்களை ஒரு பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. திருவேதிக்குடி தல புராணத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல்...

கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக் கீழ்க்கோட்டம்

பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி

பொற்புற வார்பனங்காட் டூர் நெல்லிக் காவேழும்

பொற்பரிதி பூசனை செய்யூர்.

‘கண்டியூர், வேதிக்குடி, நல்லகுடந்தைக் கீழ்க்கோட்டம் எனும் கும்பகோணம் நாகேசுவரர் ஆலயம், பண்பமைந்த பரிதி நியமம் எனும் பருத்தியப்பர் கோயில், திருத்தெளிச்சேரியான கோயில் பத்து, பொன்புறவார் பனங்காட்டூர், நெல்லிக்கா ஆகிய ஏழு திருத்தலங்களும், பொன்போல் பிரகாசிக்கும் சூரியனானவன் சிவனாரை வழிபட்ட திருத்தலங்கள் ஆகும்’ என்பதே இந்தப் பாடலின் கருத்து.

சனி சூரியன் சேர்க்கை

பன்னிருவர் வழிபட்ட பாஸ்கரபுரி

ஒருமுறை, உலகை ஒளிரச் செய்யும் பணியை யார் செய்வது என்பதில், ஆதித்யர்கள் பன்னிருவருக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. பிரம்மதேவன் அவர்களை ஆற்றுப்படுத்தி, சித்திரை துவங்கி ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொருவர் பணி செய்யும்படி உத்தரவிட்டார்.

அப்படி அவர்கள் பணி செய்யும் காலத்தில், உதயவேளையின்போது, மந்தேகர் முதலான அசுரர்கள் அவர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தினர். எனவே, ஆதித்யர்கள் பிரம்மனைத் தரிசித்து முறையிட்டனர். அவர், அவர்களை திருக்கழுக்குன்றத்துக்குச் சென்று வழிபடும்படி கூறினார். அதன்படியே, அவர்கள் அந்தத் தலத்துக்குச் சென்று சிவனாரை வழிபட்டார்கள். அவரும், அசுரர்களால் ஏற்படும் தடைகள் நீங்க அருள்பாலித்ததார். இங்ஙனம் ஆதித்யர்கள் வழிபட்டதால் திருக்கழுக்குன்றத்துக்கு பாஸ்கரபுரி, தினகரபுரி, ஆதித்யபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டதாக திருக்கழுக்குன்றத்து உலா, திருக்கழுக்குன்ற புராணம் ஆகிய நூல்கள் விவரிக்கின்றன.

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு! - கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்! - Album

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.! கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்.! மேலும் பார்க்க

மனம் விரும்பும் புண்ணிய ஸ்தலங்கள் - என் புத்தாண்டு அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி திருக்கோயிலில் சுவாமி எழுந்தருளும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்க... மேலும் பார்க்க

வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு | Photo Album

சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல் திறப்பு சொர்கவாசல... மேலும் பார்க்க

நிகும்பலா ஹோமம்: தீராத தீமைகளையும் தீர்த்து வைக்கும் இந்த வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்!

திருமணத் தடைகள், குடும்பத்தில் தொடர்ந்து வரும் சிக்கல்கள், வியாபார தொழில் தேக்கங்கள், மாறி மாறி வரும் மன - உடல் உபாதைகள் யாவையும் நீங்க இந்த நிகும்பலா யாகம் உதவும்.நிகும்பலா ஹோமம் முன்பதிவு மற்றும் சங... மேலும் பார்க்க