செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்தில் உதவியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்

post image

மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Materials, Stores)

காலியிடம்: 1

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6.12 லட்சம்

தகுதி: Stores, Materials Management இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Station In-Charge (RCS)

காலியிடங்கள்: 8

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Marketing,Finance, Aviation பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.6.12 லட்சம்

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Helper

காலியிடங்கள்: 8

தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ 3.22 லட்சம்

வயது : 25-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு செல்லும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 118. இதனை Pawan Hans Limited, Delhi என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.pal.ainiai என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

HOD (HR & Admin), Northern Region Pawan Hans . Limited, Northern Region, Rohini Heliport, Sector 36, Rohini, New Delhi - 110 085. Phone: 011-27902646.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது மற்றும் பிரிண்ட அவுட் வந்து சேர கடைசி நாள்: 10.5.2025

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கர்நாடகம் மாநிலம் மைசூருவில் செயல்பட்டு வரும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டி... மேலும் பார்க்க

ஐஐஎம்-இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய கல்வி அமைச்சத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) புத்த கயாவில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்... மேலும் பார்க்க

என்டிபிசி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் பொறியாளர் வேலை: காலியிடங்கள்: 182

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி வணிகத்தில் முன்னிலையில் உள்ள என்டிபிசி பசுமை எரிசக்தி லிமிடெட் (என்ஜிஇஎல்) நிறுவனத்தில... மேலும் பார்க்க

விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய விமானப்படையில் இசைக் கலைஞராக பணிபுரிய அக்னி வீரர் வாயு திட்டத்தின்கீழ் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சர்.சி.வி. ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பயிற்சி பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண் : 05 / 20... மேலும் பார்க்க

ஓட்டுநர், சுருக்கெழுத்தர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு மாற்றுவதற்காக நிறுவப்பட்ட மாவட்ட அளவிலான பண்ணை அறிவியல் மையம் கிருஷி விக்யான் கேந்திரா(கேவிகே). இந்த மையம் மற்றும் பெரம்பலூர்... மேலும் பார்க்க