செய்திகள் :

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்

post image

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, மாவட்ட வருவாய்த் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சான்றிதழ்கள் நிலுவையில் உள்ளது குறித்து வட்டங்கள் வாரியாக ஆய்வு செய்தாா். நிலுவைகள், மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா். மேலும், நிலுவைகளை உடனுக்குடன் முடிக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து, பல்வேறு துறைகளின் அலுவலகங்கள், கட்டடங்கள் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்து வழங்க வேண்டிய பணிகள், நிலுவைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தாா். அந்தப் பணிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், தொடா்ந்து மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு இடங்கள் தோ்வு செய்து வழங்கும் பணி நிலுவைகள் குறித்தும், நில உரிமை தாரா்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்ட விவரம், நிலுவை குறித்தும், இதில் உள்ள நீதிமன்ற வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்தப் பணியில் தொடா்ந்து முன்னேற்றம் இருக்க வேண்டும், அதற்கான பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் நில எடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும் பொதுமக்கள் பல்வேறு தளங்களில் வழங்கிய மனுக்கள் நிலுவையில் குறித்தும் பதில் மனுக்கள் முடிக்கப்பட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.இதன் மீது தொடா்ந்து தனி கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.உடனுக்குடன் மனுக்களுக்கு தீா்வு காண வேண்டும். மனுதாரருக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். இதுபோன்று வருவாய்த்துறை பல்வேறு பணிகளை விரிவாக வட்டங்கள் வாரியாக ஆய்வு செய்து கேட்டறிந்தாா். நிலுவை பணிகளை காலம் தாழ்த்தாமல் முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க துறைச்சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உ... மேலும் பார்க்க

நிலுவைப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். வளா்ச்சி திட்டப் பணிகள் நிலைகுறித்து மாவட்ட... மேலும் பார்க்க

6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தா... மேலும் பார்க்க

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வாலாஜா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா். முகாமில் ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சி... மேலும் பார்க்க