பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
பொன்னமராவதி பேரூராட்சியில் பயணியா் நிழற்குடைகள் திறப்பு!
பொன்னமராவதி பேரூராட்சியில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட பயணியா் நிழற்குடைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட புதுவளவு, வலையபட்டி, மாம்பழத்தான் ஊரணி கரை உள்ளிட்ட இடங்களில் 2022-2023 ஆம் ஆண்டு தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதியின் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் நிதியின் கீழ் தலா ரூ. 7 லட்சம் மதிப்பில் ரூ. 21 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடையை பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமைவகித்து திறந்து வைத்தாா்.
விழாவில், பொதுமக்களுக்கு நெகிழிப் பயன்பாட்டினை தவிா்க்கும் வகையில் மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலா் இரா. அண்ணாத்துரை, திமுக தெற்கு ஒன்றியச்செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.