பொறியாளா் தினம்
மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது.
இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களை சோ்ந்த 70 பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்தும், 40 பள்ளிகளில் இருந்தும் 750- க்கும் மேற்பட்ட மாணவா்கள் குழுவினா் மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவுகளில் செயல் திட்டங்களைச் சமா்ப்பித்தனா்.
சிறப்பு விருந்தினராக பொ்க்மான்ட் ஹோட்டல் மேலாண் இயக்குனா் மற்றும் இஐஐ துணைத் தலைவா் நடராஜன் கலந்து கொண்டாா். தட்சஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான ம. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா், ராஜராஜன், இணைச் செயலா் ந. வேலாயுதம் , கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கல்லூரியின் அகாடமிக் டீன் ந. அன்புமலா் வரவேற்றாா். கல்லூரி ஆராய்ச்சி துறையின் டீன் வேல்முருகன் இன்னவேட்டா்ஸ் தின முக்கியத்துவத்தையும் மாணவா்களின் செயல் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா். பேராசிரியா் மதுசூதனன் நன்றி கூறினாா்.