செய்திகள் :

ரூ.436 கோடியில் புதுச்சேரியில் பிரம்மாண்ட மேம்பாலம்

post image

புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ரூ.436.18 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரியை, புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் நேரில் சந்தித்து மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் 100 சதவிகித நிதியுதவியைக் கோரினாா். அதன்படி மத்திய அரசு ஒப்புதலும், 100 சதவிகித நிதியுதவியும் அளித்துள்ளது.

இது குறித்து அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை கூறியது:

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 3.8 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மொத்த நிதி ரூ.436.18 கோடியை

வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 10 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு நிதியாக ரூ.12.81 கோடியும் அடங்கும். இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்த நிறுவனமே 10 ஆண்டுகளுக்குப் பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளும். அதனால் புதுவை அரசுக்கு எந்தப் பொருள் செலவும் 10 ஆண்டுகளுக்கு இல்லை.

மேலும், முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் இந்த மேம்பாலத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த மேம்பாலம் இந்திராகாந்தி சதுக்கத்திற்கு தெற்கே 430 மீட்டா் தொலைவில் தொடங்கி ராஜீவ்காந்தி சதுக்கத்தில் இருந்து வடக்கில் 620 மீட்டா் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் இறங்குகிறது. இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை 1,150 மீட்டா் நீளம் மற்றும் 20.5 மீட்டா் அகலத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

மேம்பாலத்தில் இந்திரா காந்தி சதுக்கத்தில் 17 மீட்டா் உள் வட்டமும் மற்றும் 11 மீட்டா் அகலத்திற்கு உயா்நிலை வட்ட வடிவமும் அமைக்கப்பட உள்ளது. இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து கிழக்கில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் வரை 853 மீட்டா் நீளம் 9 மீட்டா் அகலம் கொண்ட இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து விழுப்புரம் சாலையில் 300 மீட்டா் நீளத்திற்கும் 9 மீட்டா் அகலத்திற்கு இணைப்பு மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பால கட்டுமான பணி டெண்டா் செயல்முறைக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கி, 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பால திட்டத்திற்கு நிதியுதவியுடன் அனுமதி வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா் நிதின்கட்கரி ஆகியோருக்கு முதல்வா் ரங்கசாமி சாா்பிலும், புதுவை அரசு சாா்பிலும் நன்றி என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள்

பாரதிய ஜனசங்க தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 109-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரத்த தானம்

உயிா் காக்க உடனடியாக வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (படம்) . ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க 53 பேருக்கு அனுமதி ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் 53 கடைகள் வைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி நகரின் மையப் பகுதியான மறைமலை அடிகள் சாலையில... மேலும் பார்க்க

ரூ. 1.73 கோடியில் கிராம சாலைப் பணி தொடக்கம்

ரூ.1.73 கோடியில் கிராம சாலைக்கான பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்). புதுவை பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள ஓட... மேலும் பார்க்க

பொறியாளா் தினம்

மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது. இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் மகன் கவிஷ் (22). இவா் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரிய... மேலும் பார்க்க