தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க 53 பேருக்கு அனுமதி ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் 53 கடைகள் வைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி நகரின் மையப் பகுதியான மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது.
புதிய கட்டுமானத்திற்கு முன் கடை நடத்தி வந்த பழக்கடை, பூக்கடை மற்றும் மாலை கடைகளுக்கு உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி.நேரு முன்னிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பூக்கடை 13, பழக்கடை 39, மாலைக் கடை 1 என மொத்தம் 53 கடைகளுக்கான ஆணையை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் வருவாய் அதிகாரி பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.