செய்திகள் :

`பொறுப்புள்ள' சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! - என்ன பிரச்னை?

post image

கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.

`இது உலக நாடுகளைப் பாதிக்கும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார்.

சீனா
சீனா

'பொறுப்புள்ள' சீனா

இந்தக் கட்டுப்பாடுகள் விதிப்பிற்கு சீனா,

"தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது.

சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது" என்று காரணம் கூறுகிறது.

இந்தியாவின் ஆதரவு

ஆனாலும், இந்தக் காரணத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை போலும். அதனால் தான், நேர்காணல் ஒன்றில் நேற்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்,

"இது சீனா Vs பிற உலக நாடுகள் ஆகும். சீனா தற்போது அறிவித்துள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது.

இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இந்தக் கட்டுப்பாட்டை சீனா ஏன் முடிவு செய்துள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்

பாதுகாப்பு, எலெக்ட்ரிக் வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு முக்கிய தேவைகளான அரிய கனிமங்களின் மீது தங்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை சீனா ஆயுதமாக்குவதை அமெரிக்கா அனுமதிக்காது.

நாம் நமது இறையாண்மையை பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப் போகிறோம். நாம் ஏற்கெனவே நம் கூட்டாளிகளிடம் இது குறித்து பேசிவிட்டோம். அவர்களை இந்த வாரம் சந்திக்கிறோம்.

இதற்கான உலகளாவிய ஆதரவை ஐரோப்பிய நாடுகள், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என்று பேசியுள்ளார்.

சீனாவின் இந்தக் கட்டுப்பாடு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

உலகளவில் பெரிய அளவிலான ஏற்றுமதிகளை சீனா தான் செய்து வருகிறது. சீனா இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அந்தக் கனிமங்களின் விலை கூடும் மற்றும் டிமாண்ட் அதிகரிக்கும்.

இதனால், உலகளவில் பல உற்பத்திகள் பாதிக்கக்கூடும். இது உலகளாவிய சவாலாக மாறலாம்.

ஆந்திராவில் Google AI Hub திட்டம்; "ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்" - அண்ணாமலை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் ... மேலும் பார்க்க

`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? - என்ன நடக்கிறது?

அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை... மேலும் பார்க்க

`பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் ... மேலும் பார்க்க

மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக்கிய 500 மாணவர்கள்

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: "முரணான தகவல்கள், திட்டமிட்டு செய்திருக்கின்றனர்" - பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக சட்ட மன்றத்தில் இன்று பிறவிவாதங்களை ஒதுக்கி கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டாலும் எடப்ப... மேலும் பார்க்க

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்? குற... மேலும் பார்க்க