செய்திகள் :

பொள்ளாச்சி தீர்ப்பில் உரிமை கோர நியாயமில்லை; குற்றவாளிகளே ஆதாரங்களை உருவாக்கியிருந்தனர்: திருமாவளவன்

post image

கோவை : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினால், இந்தியாவில் இனி எங்கும் தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை என்று கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., என உரிமை கோருவதில் நியாயம் இல்லை ஆதாரங்கள் தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை. குற்றச்சாட்டிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல், இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மூலையிலும் நடக்கக் கூடாது என்ற அளவுக்கு இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ? என்ற ஐயம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்குரைஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது இதில் உறுதிபடுகிறது. அந்த வகையில் அரசு தரப்பு வழக்குரைஞர்களையும் பாராட்டுகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது.

அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என உரிமை கோருவதில் நியாயம் இல்லை, சான்றுகள் வலுவாக இருந்தது. குறிப்பாக செல்போன்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதுவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை. குற்றச்சாட்டிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை, அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையாங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கை சி பி ஐக்கு மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவும் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு அந்த வழக்கு என தனித்தனியாக அணுக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்

பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைத்துள்ளதற்கு திமுக அரசுக்கோ முதல்வர் ஸ்டாலினுக்கோ எந்தப் பங்கும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்!

போக்ஸோ வழக்கில் கைதான மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.கிறிஸ்தவ மத பாடல்கள் மூலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் கோவையைச் சேர்ந்த கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரா... மேலும் பார்க்க

'பெருமை கொள்கிறேன்! ஊக்கம் பெறுகிறேன்!' - தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாட்டில் குழந்தைகளின் இறப்பு விகிதம் பற்றிய தினமணி தலையங்கம் பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி 'தம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் கல்வராயன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாகப் பணியை முடித்து பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது.இது தொடர்பாக சென்னை மெட்... மேலும் பார்க்க

முகூர்த்தம், வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!

முகூர்த்தம், வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.இது குறி... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா: செயல் அளவில் நடவடிக்கைகளை எப்போது? - விஜய் கேள்வி!

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்... மேலும் பார்க்க