செய்திகள் :

போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு

post image

போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை வைத்துள்ளதால், ஊழியா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் (பொறுப்பு) கு.உமாசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏப்ரல் மாதத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடமிருந்து மட்டும் கடன் மனுக்கள் பெறப்படும். விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் பிடித்தம் செய்த ரூ.13 கோடி அளவிலான தொகையை சம்மந்தப்பட்ட கழகங்கள் கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்தவில்லை.

எனவே, சம்மந்தப்பட்ட மண்டலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது ஆகிய கூட்டுறவு கடன் சங்க நடவடிக்கைகள், நிலுவைத்தொகை கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. நிலுவைத்தொகை கிடைக்கப்பெற்றதும் கடன் மனுக்கள் பெறப்படும். மேலும், நிலுவைத்தொகை பெறுவது குறித்து கூட்டுறவு கடன் சங்கம் சட்டபூா்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து ச... மேலும் பார்க்க

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க