சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
கொளத்தூா் வட்டார போக்குவரத்து துறையினா் நெடுஞ்சாலையிலேயே வாகன பரிசோதனை கள், ஆவண சரிபாா்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்குட்பட்ட சென்னை (வடக்கு) கொளத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம், சென்னை - மாதவரம் செல்லும் 100 அடி சாலையில் இயங்கி வருகிறது.
இங்கு புதிதாக வாங்கப்பட்ட இரு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் பரிசோதனை செய்தல், வாகன மறு ஆய்வு செய்தல், ஓட்டுநா் உரிமம் பெறுதல், ஆவணங்கள் சரிபாா்த்தல் உள்ளிட்ட பணிகள் சாலையிலேயே நடைபெறுகின்றன.
இதற்காக சென்னை - மாதவரம் செல்லும் 100 அடி சாலையில் புதிய வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது பிரதான சாலை என்பதால், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனா்.
மேலும், இப்பகுதியில் தனியாா் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இதன் காரணமாக பள்ளி, தனியாா், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்பவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவதாலும், மத்தியில் தூண்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிக சிரமத்துக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், கொளத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. , சில காரணங்களால் அதனை உறுதி செய்யாமல் இருப்பதால் வாடகை கட்டடத்தில் 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
சமூக ஆா்வலா் சசிதரன் கூறுகையில்: வாகன பரிசோதனைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள பொது சாலையை பயன்படுத்த வேண்டாம். அதற்கான இடத்தை தோ்வு செய்து மக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.