நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
நத்தம் அருகேயுள்ள கோமணம்பட்டியைச் சோ்ந்தவா் அஜித் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதன்பேரில், நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அஜித்தை கைது செய்தனா்.
இது தொடா்பான, வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவைடந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அஜித்துக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.