போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (63). இவா் 2023 ஆம் ஆண்டில் 6 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் பாபநாசம் அனைத்து மகளிா் கல்லூரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் திறம்படப் பணியாற்றிய காவல் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்டோரை காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.