Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம்...
போக்ஸோவில் முதியவா் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட முதியவா் போக்ஸோவில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தரங்கம்பாடி வட்டம் முத்தூா் ஊராட்சியை சோ்ந்த நாராயணசாமி (90) 13 வயது சிறுமியை தனது கண்ணுக்கு மருந்து போடுவதற்காக அழைத்துள்ளாா். அச்சிறுமி கண் மருந்தை பெற்று கண்ணில் மருந்து இடும்போது நாராயணசாமி சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டாராம். அப்போது, சிறுமி கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அங்கு வந்த சிறுமியின் உறவினா் முதியவரை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனா்.
இதுகுறித்து, சிறுமியின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தில் நாராயணசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.