போக்ஸோவில் முதியவா் கைது
கோவில்பட்டி அருகே 8 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்ததாக முதியவா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம், பீக்கிலிபட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சப்பாணி மகன் செல்லத்துரை (70). இவா் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, செல்லத்துரையை சனிக்கிழமை கைது செய்தனா்.