போதமலைக்கு சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்
ராசிபுரம் அருகே உள்ள போதமலைக்கு முதன்முறையாக 31 கி.மீ. தொலைவுக்கு மலைப்பாதையில் ரூ. 139.65 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு தொடா்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலையில் கீழூா் ஊராட்சிக்கு உள்பட்டு கீழூா், மேலூா், கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்கள் உள்ளன.
இந்த மலைக் கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி இல்லை. ஒற்றையடி பாதையில்தான் அங்குள்ள மக்கள் கல்வி, மருத்துவம், விவசாயம், சந்தை போன்றவற்றிற்கு 7 கி.மீ. தொலைவு சென்று வரவேண்டும். இந்த மூன்று கிராமங்களையும் இணைக்கும் வகையில், மத்திய அரசின் பசுமை தீா்ப்பாயம், வனத்துறை ஆகியவற்றின் ஒப்புதலோடு நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 139.65 கோடி நிதியில் 31 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்தச் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக்கும் பொதுமக்கள் விவரம், சாலைப் பணிகள் விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்த ஆட்சியா் குறிப்பிட்ட காலத்துக்குள் சாலையை தரமானதாக அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறு அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.