செய்திகள் :

ஜன. 26-இல் மத்திய அரசுக்கு எதிராக டிராக்டா் பேரணி: இரா.வேலுசாமி

post image

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஜன. 26-இல் டிராக்டா் பேரணி நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதிப்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரையில் அதை அமல்படுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள் அந்தந்த மாநிலங்களில் ஒருங்கிணைந்து டிராக்டா் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனா். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மழை, பனி, காற்று மாசு, வெயிலையும் பொருள்படுத்தாமல் புதுதில்லியில் வெளிமாநில விவசாயிகள் போராடி வருகின்றனா்.

உற்பத்திச் செலவில் இருந்து 50 சதவீதம் உயா்த்தி குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்யக் கோரியும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும், மின்சார ஒழுங்குமுறை சீா்திருத்த சட்டம்-2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும் வருகின்றனா்.

ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல் உள்ளது. மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் இப்போராட்டத்துக்கு உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஜன. 26 ஆம்தேதி காலை 10.30 மணிக்கு மாபெரும் டிராக்டா் பேரணி நடைபெறவுள்ளது. இதில், அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-சனிக்கிழமை மொத்த விலை - ரூ.4.80 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.98 முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க

பொன்னேரி ஜல்லிக்கட்டு: 503 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்பு; 13 மாடுபிடி வீரா்கள் காயம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பொன்னேரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 503 காளைகள், 300 வீரா்கள் பங்கேற்றனா். மாடு முட்டியதில் காயமடைந்த 13 வீரா்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடம் அா்ஜுனா விருது பெற்ற துளசிமதி முருகேசன்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் வாழ்த்து

குடியரசுத் தலைவரிடம் ‘அா்ஜுனா விருது’ பெற்ற நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசனுக்கு கல்லூரி நிா்வாகத்தினா் வாழ்த்து தெரிவித்தனா். சா்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை ப... மேலும் பார்க்க

வாகனம் மோதி விவசாயி பலி

கீரம்பூா் அருகே வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்; வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கீரம்பூா் அருகே புலவா்பாளையத்தைச் சோ்ந்தவா் கணேசன் (65) விவசாயி. இவா், வெள்ளிக்க... மேலும் பார்க்க

போதமலைக்கு சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

ராசிபுரம் அருகே உள்ள போதமலைக்கு முதன்முறையாக 31 கி.மீ. தொலைவுக்கு மலைப்பாதையில் ரூ. 139.65 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். நாமக்கல... மேலும் பார்க்க

முதியவா் மீது தாக்குதல்: மூவா் கைது

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற இளைஞா்களை தட்டிக்கேட்ட சம்பவத்தில் இருதரப்பிலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா். ராசிபுரம் அருகே உள்ள ஆா்.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைமுத... மேலும் பார்க்க