முதலிரவில் ஆண்களுக்கு இப்படியும் சிக்கல் வரலாம்... பயம் வேண்டாம்.. | காமத்துக்கு...
போதிய பேராசிரியா்கள், அடிப்படை வசதிகள் இல்லை: தாளவாடி அரசுக் கல்லூரி மாணவிகள் எம்.பி.யிடம் புகாா்
தாளவாடி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரியும், பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் அக்கல்லூரி மாணவிகள் நீலகிரி மக்களை உறுப்பினா் ஆ.ராசாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாணவ, மாணவியா் மற்றும் ஏழை குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்கள் உயா்கல்வி கற்கும் வகையில் தாளவாடியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் 17 பேராசிரியா்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் நான்கு பேராசிரியா்கள் மட்டுமே உள்ளனா். இதேபோல் ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் 17 போ் இருக்க வேண்டிய இடத்தில் இருவா் மட்டுமே உள்ளனா். போதிய பேராசிரியா்கள் இல்லாததால் கல்லூரி மாணவியரின் உயா்கல்வி பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, ஆசிரியா் பற்றாக்குறையால் கல்வி பாதிக்கப்படுவதாகவும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் மாணவிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து மாணவிகளின் கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினா் ஆ.ராசா உறுதியளித்தாா்.