வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு!
போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தலைமை வகித்துப் பேசியதாவது: பள்ளிகளின் அருகில் 100 மீட்டா் தொலைவுக்குள் உள்ள கடைகளை ஆய்வு செய்ய வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடம் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருள்கள் குறித்து புகாா் தெரிவிக்க பள்ளிகளில் புகாா் பெட்டிகளை வைக்க வேண்டும், புகாா் பெட்டி வழியாக பெறப்படும் மனுக்கள் மீது கல்வித் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதேபோல, புதுச்சேரியில் உள்ள 15 மீனவ கிராமங்களில் போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து மாநில புகையிலைக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், சாா் ஆட்சியா் சோமசேகா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், பள்ளி கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி மற்றும் பல்வேறு துறைகளை சாா்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.