பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசார வாகனம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
போதை பொருள்கள் குறித்த விழிப்புரணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இயக்க மேலாண்மை அலகு மூலம் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக
வளாகத்திலிருந்து இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இப்பிரச்சார வாகனம் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அப்போது, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
முன்னதாக, “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான, பேசுதல் இன்றி கை மற்றும் உடல் இயக்கங்களாலும் முகக் குறிப்புகளால் நடித்துக் காட்டும் மைம் கலை நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலால் துணை ஆணையா் (ஆயத்தீா்வை) கு.பிரேம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.