செய்திகள் :

`போலி’ ஆன்லைன் கோர்டில் குற்றவாளியாக அறிவிப்பு - 71 வயது மூதாட்டியிடம் ரூ.4.82 கோடி அபகரிப்பு

post image

மும்பையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் இந்த மோசடியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் 71 வயது மூதாட்டி ஒருவர் இணைய தள குற்றவாளிடம் ரூ.4.82 கோடியை இழந்துள்ளார். அந்த மூதாட்டிக்கு கடந்த டிசம்பர் மாதம் தெரியாத நம்பரில் இருந்து ரீசார்ஜ் தொடர்பாக ஒரு அழைப்பு வந்தது. அடுத்த இரண்டு நாள் கழித்து மேலும் ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மொபைல் கம்பெனி வாடிக்கை சேவை பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அந்த நபர் மூதாட்டியிடம் 9வது நம்பரை அழுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே போன் அழைப்பு வேறு ஒரு நம்பரோடு இணைக்கப்பட்டது. அதில் பேசிய நபர் தன்னை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்றும், உங்களது போன் நம்பர் சட்டவிரோதத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ.6.8 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதோடு உங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மூதாட்டி வங்கிக்கணக்கு விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து மற்றொருவர் போன் செய்து தன்னை சுங்க அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

ஆன்லைன் கோர்ட்டில் விசாரணை?

அந்த நபர் உங்கள் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், வீடியோ காலில் வரவேண்டும் என்றும், வெள்ளை கலர் ஆடை அணிந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். மூதாட்டியும் பயத்தில் வெள்ளை ஆடை அணிந்து கொண்டார். போனில் பேசிய நபர் வீடியோ காலில் வந்தார். வீடியோ காலில் கோர்ட் அறை போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. அங்கு சிலர் வழக்கறிஞர்கள் போன்று இருந்தனர். அதோடு போலி நீதிபதி ஒருவரும் அமர்ந்திருந்தார். விசாரணையின் போது மூதாட்டியை போலி நீதிபதி குற்றவாளியாக அறிவித்தார்.

பின்னர் அதே நபர் போன் செய்து, இவ்வழக்கில் இருந்து விடுவிக்க சில ஆலோசனைகளை தெரிவித்தார். அவர்கள் சொன்னபடி மூதாட்டி தனது வங்கிக்கணக்கில் இருந்தும், வைப்பு தொகையாக இருந்த பணத்தையும் எடுத்து அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். மொத்தம் ரூ.4.82 கோடி அளவுக்கு டிரான்ஸ்பர் செய்தார். அப்படி இருந்தும் தொடர்ந்து மோசடி பேர்வழிகள் பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகுதான் மீடியாக்களில் ஆன்லைன் மோசடி தொடர்பாக விளம்பரம் வருவது மூதாட்டிக்கு நினைவுக்கு வந்தது. உடனே சைபர் பிரிவு உதவி எண்ணான 1930க்கு போன் செய்து தகவல் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஆன்லைன் மோசடி

ஏற்கனவே மும்பை தெற்கு பிராந்திய சைபர் பிரிவு போலீஸார் ரூ.20.26 கோடி மோசடி தொடர்பாக விசாரித்து வந்தனர். இதில் மோசடி செய்யப்பட்ட பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நபர்கள் 8 பேரை கைது செய்திருந்தனர். அவர்களில் பாபி தாஸ் மற்றும் செளரிஷ் ஆகியோரும் அடங்கும். இவர்களது வங்கிக்கணக்கிற்கு மூதாட்டி அனுப்பிய 30 லட்சம் மற்றும் 25 லட்சம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று மும்பை அந்தேரியை சேர்ந்த அஜய் என்பவர் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரிடம் ரூ.1 கோடியை பறிகொடுத்துள்ளார். ரூபாய் 10 கோடி கடன் வாங்கித்தருவதாக கூறி டெல்லியை சேர்ந்த அமீர் உசேன் என்பவரும், அவரது கூட்டாளிகள் அனுஜ் ராவத் மற்றும் லால் கான் ஆகியோர் அஜயிடம் கமிஷனாக 10 சதவீத தொகையை பெற்றனர். மொத்தம் 69 தவணைகளில் ரூ.1.14 கோடியை அஜய் அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பிறகு மூவரும் தொடர்பை துண்டித்துக்கொண்டனர். இதையடுத்து அஜய் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரும் மோசடி குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆன்லைன் மோசடிகள் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. மக்களாகிய நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

புதுச்சேரி: `பாஜக பிரமுகரை காவு வாங்கிய பாரதியார் நிலம்!’ - பழிக்குப் பழியா… பகைக்கான விலையா ?

விபசார வழக்கில் கைதுபுதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் அகில இந்திய OBC பிர... மேலும் பார்க்க

தேனி : போலி நகை விற்பனை செய்தவர் கொன்று புதைப்பு; 7 பேர் கைது - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரும் இவரது சகோதரி மகன் கழுவா என்பவரும் (37) தேனி மாவட்டத்தில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.... மேலும் பார்க்க

பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான நகை - வழக்கு பதிவு

பாலிவுட் நடிகை நேகா மாலிக், மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் ஷானாஸ் முஸ்தபா ஷேக் என்ற பெண் வேலை செய்து வந்தார். நடிகை நேகா அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடியவர் என்ப... மேலும் பார்க்க

MyV3Ads: `பணம் கிடைக்கவில்லை என்றால்...' - காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலையிடமாகக் கொண்டு MyV3Ads என்கிற நிறுவனம் இயங்கி வந்தது. APP -ல் விளம்பரம் பார்த்தால் பணம் என்று மக்களிடம் நூதன முறையில் ஆசையைத் தூண்டியது. அதை நம்பி தென்னிந்தியா முழுவதும் இருந்து ... மேலும் பார்க்க

தமிழகத்தை உலுக்கிய கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை; புகாரை கூட ஏற்காத போலீஸ் - வழக்கு கடந்து வந்த பாதை

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர... மேலும் பார்க்க

தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தைகள்; நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழ... மேலும் பார்க்க