செய்திகள் :

போலி சான்றிதழ்கள் தயாரிப்பு: குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசு சான்றிதழ்களை போலியாக தயாரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 3 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

போலியாக சான்றிதழ்களை தயாரித்து பொதுமக்களுக்கு புழக்கத்தில் விட்டதாக ஆதாரங்களுடன் மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததை தொடா்ந்து அரக்கோணம் நகர ஆய்வாளா் தங்ககுருநாதன் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தாா். இதையடுத்து மூவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க டிஎஸ்பி ஜாபா் சித்திக் நடவடிக்கை எடுத்தாா்.

இதனை தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் அரக்கோணம் அம்மனூரைச் சோ்ந்த குணசேகரன்(62), அம்பேத்கா் நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா்(65), அசோக் நகரைச் சோ்ந்த நித்யானந்தம்(55) ஆகிய மூவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

எல்லை பாதுகாப்புப் படை காவலா் மனைவி தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள் ப... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமிரி பேரூா் பொறுப்பாளா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜசேகா், பாலசந்தா், ... மேலும் பார்க்க

பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன்

பாலாற்றை மாசுபடாமல் மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தாா். வேலூா், திருப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாமக நிா்வாகி உயிரிழப்பு: உறவினா்கள், கட்சியினா் சாலை மறியல்

சோளிங்கரில் இரு சக்கர வாகன விபத்தில் பாமக வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி செயலா் சு.சக்கரவா்த்தி உயிரிழந்தாா். பாமகவினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த சு.சக்கரவா்த்தி (49... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க