செய்திகள் :

போலி சான்றிதழ் கொடுத்து எய்ம்ஸ் கல்லூரியில் சேர முயற்சி... ஹிமாச்சல் மாணவர் கைது!

post image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் கங்கோத்தி நமேல் என்ற ஊரைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக தனது தந்தை மகேந்திர சிங்குடன் வந்துள்ளார்.

மாணவர் அபிஷேக்

மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் கடந்த அக்டோபர் 19-யுடன் முடிந்த நிலையில் மருத்துவக் கல்லலூரியில் அபிஷேக் சேர வந்தது எய்ம்ஸ் கல்லூரி நிர்வாகத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அபிஷேக்கின் நீட் மதிப்பெண் சான்றிதழை சரி பார்த்த போது அது போலி மதிப்பெண் சான்றிதழ் என தெரியவந்தது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கான பொறுப்பு அதிகாரி டாக்டர் கணேஷ் பாபு இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி - ராமநாதபுரம்

போலீஸார் விசாரணையில் மாணவர் அபிஷேக்கின் தந்தை ஹிமாச்சல் மாநிலத்தில் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் பள்ளி படிப்பை முடித்த அபிஷேக் இரு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. மூன்றாவது முறையாக தேர்வு எழுதிய போதும் அதில் 60 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து போலி சான்றிதழ் தயாரித்துள்ளார். மேலும், அவரது தந்தையை மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர வந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து மாணவர் அபிஷேக்கை கேணிக்கரை போலீஸார் கைது செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க

வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ... மேலும் பார்க்க

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க

இறந்ததாக அறிவித்த 3 மருத்துவர்கள்; தகனம் செய்யும்போது உயிர்த்தெழுந்த இளைஞர் - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசித்தவர் ரோஹிதாஷ் குமார் (25). வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரின் உறவினர்கள், அ... மேலும் பார்க்க

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு; போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. இவர் விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்ற... மேலும் பார்க்க