செய்திகள் :

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

post image

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால், விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் பேசிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோத செயல்களை ஒடுக்குதல் சட்டம், 1982 -ன் கீழ் விமான பாதுகாப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளுக்கு விமானங்களில் பறப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

மேலும், “விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் உள்துறை அமைச்சகத்துடன் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும்போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும், இதற்கென சர்வதேச நெறிமுறைகள் உள்ளன” என்றார்.

தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சுறுத்தலும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகளை சிறப்பாக கையாண்டுள்ளோம். அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்த போதிலும் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை.

பயணிகளின் உயிர், பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். மேலும், சரியான நடைமுறைகளைப் பின்பற்றுதலும் மிக முக்கியமானது. தற்போது விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கொல்கத்தா: மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்ற தவறியதாக கூறி பயிற்சி மருத்துவா்கள் கொல்கத்தாவில் கடந்த அக். 5-ஆம் தேதி மாலை முதல் காலவரைய... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக லடாக் ஆதரவாளர்களுடன் புதுதில்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த லடாக்கைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவ... மேலும் பார்க்க

பெண் போலீஸ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுழலில், சுமங்கலி விரத தினமான ‘கர்வா சௌத்’ விரதம் கடைப்பிடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை (அக். 20), உத்தரப் பிரதேசத்தில் பெண் காவ... மேலும் பார்க்க

மமதாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் குழு!

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் முதல்வர் மமதா பானர்ஜி இன்று (அக். 21) பேச்சுவார்த்தை நடத்தினார். மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணிநேரத்துக்கு இந்த பேச்சுவார்த்தை நடைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: காங்.,தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது.மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!

போன்பே நிறுவனத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்(ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்... மேலும் பார்க்க