செய்திகள் :

மகன் காயம்: தவறுதலாக தந்தைக்கு அறுவைச் சிகிச்சை!

post image

ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த மகனுடன் சென்ற தந்தைக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் விபத்தில் காயமடைந்த மணீஷ் என்பவருக்கு கடந்த சனிக்கிழமை கோட்டா அரசு மருத்துவக் கல்லூரியில் காலில் அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தனக்கு உதவிக்கு ஆள்தேவை என்பதால், அவரது தந்தை ஜெகதீஸை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார்.

சனிக்கிழமை காலை அறுவைச் சிகிச்சை அரங்குக்குள் மணீஷை அழைத்துச் சென்றபோது, அறைக்கு வெளியே அவரது தந்தை ஜெகதீஸ் காத்துக் கொண்டிருந்தார்.

ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜெகதீஸால் சரியாக பேச முடியாத நிலையில், அருகிலிருந்த மற்றொரு அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்து ஜெகதீஸ் என்று அழைத்துள்ளனர்.

உடனடியாக அந்த அரங்குக்கு ஜெகதீஸ் சென்ற நிலையில், அவர் கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான பணிகளை மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தான் நோயாளி அல்ல, தனது மகனுடன் வந்ததை சொல்ல ஜெகதீஸ் முற்பட்டபோது, அவரால் பேச முடியவில்லை.

கை அறுக்கப்பட்டு, சிகிச்சைக்கான பணி தொடங்கியபோது, அரங்குக்குள் வந்த மருத்துவர் இவர் நோயாளி அல்ல எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அறுவைச் சிகிச்சை நிறுத்தப்பட்டு ஜெகதீஸின் கையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது.

நோயாளி ஜெகதீஸை அழைத்தபோது, தன்னை அழைப்பதாக நினைத்து மணீஷின் தந்தை சென்றது குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது.

இருப்பினும், நோயாளி யார் என்றுகூட உறுதி செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முயற்சித்த மருத்துவப் பணியாளர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து, கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க

குமரி - ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!

நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியோருக்கான விருதுகளை நாளை வழங்குகிறாா் பிரதமர்!

நமது சிறப்பு நிருபா் 17-ஆவது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் 16 விருதுகளை திங்கள்கிழமை (ஏப்.21 ) பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா். தில்லி... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே? மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு!

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு... மேலும் பார்க்க