செய்திகள் :

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

post image

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

129 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38.3 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரமீம் ஷமீம் 23 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஃபாத்திமா சனா 22 ரன்களும், முனீபா அலி 17 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் ஷோர்னா அக்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நிஷிதா நிஷி, ஃபஹிமா கட்டூன் மற்றும் ரபேயா கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் அணி களமிறங்குகிறது.

Pakistan were bowled out for 129 runs in their match against Bangladesh in the Women's ODI World Cup.

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

ஷுப்மன் கில்லின் அப்பாவித்தனமான முகம் அவரைக் காப்பாற்றியதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் அதிரடி ஆட்ட... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை! - இந்திய முன்னாள் கேப்டன்

பாகிஸ்தான் அணியில் 80 - 90 காலகட்டத்தில் இருந்த வீரர்களைப் போன்று திறமையான வீரர்கள் தற்போது இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்கக்... மேலும் பார்க்க

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விலைபோகாத (unsold) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் தொடரில் முழுமையாக பங்கேற்க முடிவெடுத்து... மேலும் பார்க்க

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

அகமதாபாத் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மே... மேலும் பார்க்க