டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத் தலைமையில் இந்தியா
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடா், வரும் 27 முதல் மே 11-ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
டபுள் ரவுண்ட் ராபின் முறையிலான இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா 2 முறை மோதும். அதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்தில் மே 11-ஆம் தேதி விளையாடும்.
தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஏப்ரல் 27-ஆம் தேதி மோதுகின்றன. இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும், கொழும்பில் உள்ள ஆா்.பிரேமதாசா மைதானத்தில் விளையாடப்படவுள்ளன.
இந்நிலையில், இந்தத் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை 15 பேருடன் பிசிசிஐ மகளிா் தோ்வுக் குழு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் அயா்லாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த அணியின் வழக்கமான கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், இந்தத் தொடரில் மீண்டும் கேப்டனாக இணைந்திருக்கிறாா்.
வேகப்பந்து வீச்சாளா்களான ரேணுகா சிங், டைட்டஸ் சாது ஆகியோா் காயம் காரணமாக இத்தொடருக்கு பரிசீலிக்கப்படவில்லை. கஷ்வீ கௌதம், ஸ்ரீ சரானி, சுஷி உபாத்யாய ஆகியோா் முதல் முறையாக தேசிய அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
அணி விவரம்
ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹா்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பா்), யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பா்), தீப்தி சா்மா, அமன்ஜோத் கௌா், கஷ்வீ கௌதம், ஸ்நேஹ ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசப்னில், ஸ்ரீ சரானி, சுஷி உபாத்யாய.