செய்திகள் :

மகாராஷ்டிரா: 10,12-ம் வகுப்பு மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் - சர்ச்சையானதால் புது முடிவு

post image

மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 12வது வகுப்பு மற்றும் அதனை தொடர்ந்து 10வது வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வுக்காக இப்போதே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் சாதிப்பெயரும் இடம் பெற்று இருக்கிறது. இதற்கு முன்பு இது போன்று மாணவர்களின் சாதிப்பெயர் இடம் பெற்றது கிடையாது. முதல் முறையாக இம்முறை ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயர் இடம் பெற்று இருந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்திருப்பதாக கல்வி ஆர்வலர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டினர். அரசின் இம்முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து இம்முடிவை அரசு திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து மாநில அரசு தேர்வாணையத்தின் தலைவர் சரத் கோஷாவி வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு போடவில்லை.

அவர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள குறிப்பேடுகளில் மாணவர்களின் பெயர், சாதி, பெற்றோர் பெயர் தவறாக பதிவாகி இருப்பதாக மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இது எதிர்காலத்தில் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு இடையூராக இருக்கிறது. எனவே ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் சாதிப்பெயரை குறிப்பிடுவதன் மூலம் அதில் தவறு இருந்தால் அதனை மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து சரி செய்து கொள்ள முடியும்.

அதோடு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் இது எளிதாக இருக்கும். பள்ளி ஆவணங்களில் சாதி தொடர்பான விபரங்கள் சரியாக இருந்தால் கல்வி உதவித்தொகை பெறுவது எளிதாக இருக்கும்'' என்றார். பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் வந்ததால் அரசு ஹால் டிக்கெட்டில் சாதிப்பெயரை குறிப்பிடும் திட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. மாணவர்கள் புதிய ஹால் டிக்கெட்டை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாநில அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தாயை மாட்டுவண்டியில் வைத்து இழுத்து வந்த மகன்; கிரேக்கப் பெண்ணின் திருமணம்; கும்பமேளா சுவாரஸ்யங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று மட்டும் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும்... மேலும் பார்க்க

Guillian Barre Syndrome: 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; ஒருவர் மரணம்! - என்ன நடக்கிறது புனேவில்?

கிலன் பார் சிண்ட்ரோம் Guillian Barre Syndrome (GBS). கடந்த 3 வாரங்களாக புனே நகரில் வேக வேகமாக பரவிக்கொண்டிருக்கிற நரம்பியல் நோய் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறா... மேலும் பார்க்க

Rakhi Sawant: மூன்றாம் திருமணம்; பாகிஸ்தான் நடிகரை திருமணம் செய்யும் ராக்கி சாவந்த்!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை திருமணமானவர். பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற ராக்கி சாவந்த் இரண்டாவது முறையாக திருமணம் செய்த விவாகரத்து செய்தபோது ... மேலும் பார்க்க

`உதவியற்ற நிலையில் அவர் இருந்தார்' - விவாகரத்து மனுவை திரும்ப பெற்றது பற்றி வினோத் காம்ப்ளி மனைவி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மும்பை அருகில் உள்ள தானே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது வீட்டில் உடல் நலம் தேறி வர... மேலும் பார்க்க

World Record: 320 சதுர அடி கேப்ஸுல்; 120 நாள்கள் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்த நபர்!

அனைத்து வசதிகளும் கொண்ட இந்த புவி மீது வாழ்வதற்கே நாம் பல சிரமங்களை மேற்கொள்கிறோம். ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 120 நாள்கள் நீருக்குள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.59வயதான ருடிகர் கோச், ... மேலும் பார்க்க

`நானே மாப்பிள்ளை; நானே புரோகிதர்...' - தன் திருமணத்தில் தானே திருமணச் சடங்குகள் செய்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம், சஹராம்பூர் அருகில் உள்ள ராம்பூர் மணிகரன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் விவேக் குமார். இவருக்கு ஹரித்வாரில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகன் ராம்பூரில் இருந்து ஹரி... மேலும் பார்க்க