எடையூா் சங்கேந்தியில் கூட்டுறவு வார விழா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு
மகாராஷ்டிரா: 5 ஆண்டில் 700% உயர்ந்த அமைச்சரின் சொத்து மதிப்பு; முதல்வர் ஷிண்டே சொத்து 66% அதிகரிப்பு
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வரும் 4-ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தங்களது சொத்து விபரத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரேயின் சொத்து மதிப்பு 5 ஆண்டில் 772 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐந்து ஆண்டுக்கு முன்பு அவரின் சொத்து மதிப்பு ரூ.39 லட்சமாக இருந்தது. ஆனால் இப்போது அது ரூ.3.4 கோடியாக அதிகரித்து இருக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டில் 7 கோடியில் இருந்து 15.5 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இது 117 சதவீத வளர்ச்சியாகும். அமைச்சர் சஞ்சய் ரத்தோட் சொத்து மதிப்பு 5.9 கோடியில் இருந்து 15.9 கோடியாக அதிகரித்து இருக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.82 கோடியில் இருந்து ரூ.13 கோடியாக அதிகரித்து இருக்கிறது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சொத்து ரூ.7.08 கோடியில் இருந்து ரூ.12.6 கோடியாக அதிகரித்துள்ளது.
மற்றொரு துணை முதல்வரான அஜித் பவாரின் சொத்து ரூ.71.7 கோடியில் இருந்து 103.3 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 4 அமைச்சர்களின் சொத்து 100 சதவீதத்தை தாண்டி உயர்ந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்ததும், இந்த சொத்து விவரங்கள் உயர்ந்ததுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
பா.ஜ.க அமைச்சர் மங்கள் பிரபாத் லோதாவின் சொத்து மதிப்பு உயர்வதற்கு பதில் இறங்கி இருக்கிறது. அவரது சொத்து 11 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs